ADDED : ஆக 14, 2026 04:29 AM
அ நிறம் | அளவு
ஏற்காடு: ஏற்காடில் நேற்று காலை முதல் வெயில் தாக்கம் அதிகம் இருந்-தது. ஆனால் மாலை, 5:45 மணிக்கு, ஏற்காடு, அதன் சுற்றுப்ப-குதி முழுதும், இடி, மின்னலுடன் கன மழை பெய்யத்தொடங்கி, இரவு, 7:20 மணி வரை கொட்டியது. பின் சாரல் மழையாக பெய்-தது.
இதனால் ஏற்காடு, 'குளுகுளு' என மாறியது. அதேபோல் ஓமலுார், அதன் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை, அரை மணி நேரம் காற்றுடன் மழை கொட்டியது. வாழப்பாடி, அயோத்தியாப்-பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது. சேலம் மாநகரிலும் பரவலாக மழை பெய்தது
