ADDED : செப் 12, 2026 05:50 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும், புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்-குனர் ஈஸ்வரன் தலைமையில் குழுவினர், நேற்று மதியம், வலசையூர் சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்தும்படி, 'சைகை' காட்டினர். ஆனால் சற்று முன்னதாகவே நிறுத்திவிட்டு, அதன் டிரைவர், இறங்கி தப்பி ஓடிவிட்டார்.லாரியை சோதனை செய்ததில், 3 யுனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது. மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து, வீராணம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். தொடர்ந்து ஈஸ்-வரன் புகார்படி, வீராணம் போலீசார், தப்பி ஓடிய டிரைவரை தேடுகின்றனர்.
