ADDED : நவ 27, 2024 06:44 AM
சேலம்: சேலம், எருமாபாளையம் ஏரிக்கரையில் உள்ள ராமானுஜர் மணிமண்டப வளாகத்தில், 7ம் ஆண்டு திருபவித்ர உற்சவம், நாளை மாலை தொடங்க உள்ளது. அன்று முதல் யாகசாலை பூஜை தொடங்கி, விழா நிறைவடையும் வரை தினமும் வேத பாராயணத்துடன் யாகம் நடத்தப்படும். அதில் வைத்து பூஜித்த வண்ண பவித்ர மாலைகள், அங்குள்ள, 4 பெருமாள் கோவில்களின் மூலவர், உற்சவர்கள், ஸ்ரீமத் ராமானுஜருக்கு சாத்துபடி செய்து சிறப்பு பூஜை செய்யப்படும்.
மேலும், ஆண்டு முழுதும் நடத்தப்படும் உற்சவங்களில் குறை ஏதும் இருந்திருந்தால் அதை நிவர்த்தி செய்யும்படி, 90 வகை ஆராதனங்களுடன் சாற்றுமுறை நடக்கும். பெருமாள் கருடசேவை, டிச., 1 காலை, 7:00 மணிக்கு நடக்கும். தொடர்ந்து தீர்த்தவாரியுடன் பவித்ர உற்சவம் நிறைவு பெறும். ஏற்பாடுகளை ஸ்ரீபகவத் ராமானுஜ கைங்கர்ய சொசைட்டியினர் செய்து வருகின்றனர்.