/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 20, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், இந்திய பல் மருத்துவ சங்க மேட்டூர் கிளை, மேட்டூர் டேம் சிட்டி ரோட்டரி சங்கம், தனியார் பாலிடெக்னிக் சார்பில், மேட்டூரில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடந்தது. மேட்டூர் எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே, பேரணியை, மேட்டூர் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் தொடங்கிவைத்தார்.
அதில், ஏராளமான மாணவ, மாணவியர், புகையிலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மேட்டூர் பஸ் ஸ்டாண்டில் நிறைவு செய்தனர். சங்க மாநில இணை செயலர் சந்திரமோகன், ரோட்டரி சங்க செயலர் செல்வி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.