ADDED : ஏப் 25, 2025 01:34 AM
மஹால் திறப்பு விழா
சேலம்:
சேலம், 4 ரோடு அருகே, போத்தீஸ் ஜவுளி கடையின் அடித்தளத்தில், 'போத்தீஸ் ஸ்வர்ண மஹால்' திறப்பு விழா, இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
இதுகுறித்து, போத்தீஸ் நிறுவன மேலாண் இயக்குனர் ரமேஷ் கூறியதாவது: போத்தீஸ் நிறுவனம், ஜவுளி வியாபாரத்தில், 4 தலைமுறையாக, 100 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. 3 ஆண்டாக நகை தொழிலில் ஈடுபட்டுள்ளோம். நகை வடிவமைப்புக்கு விருதுகள் பெற்றுள்ளோம். போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின், 6வது கிளை, சேலத்தில் ஏப்., 25ல்(இன்று) திறக்கப்படுகிறது.
இதனால் ஒரு கிராம் தங்கத்துக்கு, 250 ரூபாய்,  வைரம் காரட்டுக்கு, 10,000 ரூபாய் சிறப்பு தள்ளுபடியாக, அட்சய திருதியை வரை வழங்கப்படும். 3 நகை சீட்டுகள் அறிமுகப்படுத்தி உள்ளோம். அதில் மொத்தமாக பணம் கட்டும்படியும், மாதந்தோறும் கட்டும்படியும், விருப்பம் போல் கட்டும்படியும் வசதிகள் உள்ளன. வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

