ADDED : ஜூலை 13, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், பல்வேறு பக்த சபை, பஜனை குழுக்கள் சார்பில் ஆண்டு முழுதும் கட்டளை உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.
அதில், ஸ்ரீஆஞ்சநேயர் பஜனை குழுவின், 42ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மூலவர் அழகிரிநாதர், சுந்தரவல்லி தாயார், சிங்கமுக ஆஞ்சநேயர் ஆகியோருக்கு, இன்று அபி ேஷகம் செய்து, மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடக்கிறது. மேலும், ஆஞ்சநேயர் பஜனை குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.