/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேன் பறிமுதலுக்கு எதிர்ப்புதக்காளி வியாபாரிக்கு 'காப்பு'
/
வேன் பறிமுதலுக்கு எதிர்ப்புதக்காளி வியாபாரிக்கு 'காப்பு'
வேன் பறிமுதலுக்கு எதிர்ப்புதக்காளி வியாபாரிக்கு 'காப்பு'
வேன் பறிமுதலுக்கு எதிர்ப்புதக்காளி வியாபாரிக்கு 'காப்பு'
ADDED : ஏப் 25, 2025 02:21 AM
மேட்டூர்மேச்சேரி, தெத்திகிரிப்பட்டியை சேர்ந்த, தக்காளி வியாபாரி குப்புசாமி, 50. இவர் ஓசூர், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு மினி சரக்கு வேனில் சென்று, தக்காளி கொள்முதல் செய்து, மேச்சேரியில் விற்கிறார். கடந்த மாதம், 21ல் அமரம் அருகே வேனும், எதிரே வந்த பைக்கும் மோதியது. இரு வாகனங்களும் சேதமாகின. வேனை, ஸ்டேஷன் கொண்டு வரும்படி, போலீசார் குப்புசாமியிடம் தெரிவித்தனர். அவர் ஒப்படைக்காமல், விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று முன்தினம், அவர் வீடு அருகே வேன் நிற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், லாரியை ஸ்டேஷன் எடுத்துச்செல்லவிடாமல், குப்புசாமி, மனைவி அம்பிகா, 42, மகன் மோகேஷ் ஆகியோர் தடுத்து, போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் வேனை பறிமுதல் செய்த போலீசார், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிந்து, குப்புசாமியை நேற்று கைது செய்தனர்.