/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை 18வது பட்டமளிப்பு விழா

ADDED : ஜூலை 06, 2025 01:19 AM
சேலம், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலையின், 18வது பட்ட
மளிப்பு விழா, சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லுாரியில் உள்ள அன்னபூர்ணா கலையரங்கில் நாளை மதியம், 3:30 மணிக்கு நடக்க உள்ளது. பல்கலை நிறுவனர் சண்முகசுந்தரம் ஆசியுடன், வேந்தர் கணேசன் தலைமை வகித்து, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
அறங்காவலர் அன்னபூரணி, விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சரவணன் பங்கேற்க உள்ளனர். துணைத்தலைவர்கள் சதீஷ்குமார், சந்திரசேகர், அனுராதா, இயக்குனர்கள் காமாட்சி, சுமதி, அருணாதேவி, ராமசாமி, ஜெகநாதன், நிர்வாக இயக்குனர்கள் கோகுல் கிருஷ்ணன்(வளாக வளர்ச்சி), சரவணன், வசுந்தரா, ஆவர்த்தினி முன்னிலை வகிப்பர். துணைவேந்தர் சுதிர், ஆண்டறிக்கை வாசிப்பார்.
புனே பல்கலை பேராசிரியர் சேகர் மான்டே, தலைமை விருந்தினராக பேச உள்ளார். மேலும் மலேசியாவில் உள்ள, எம்.ஏ.ஹெச்.எஸ்.ஏ., பல்கலை துணைவேந்தர் முகமது ஹனீபாவுக்கு, கவுரவ முனைவர் எனும் விருது வழங்கப்படும். ஏற்பாடுகளை, பேராசிரியர் சபரிநாதன், பதிவாளர் நாகப்பன், அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.