/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மக்காச்சோளம், பருத்தி காப்பீடு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
/
மக்காச்சோளம், பருத்தி காப்பீடு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
மக்காச்சோளம், பருத்தி காப்பீடு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
மக்காச்சோளம், பருத்தி காப்பீடு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
ADDED : அக் 30, 2025 02:26 AM
சேலம், சேலம் மாவட்டத்தில் தலைவாசல், ஆத்துார், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி, வாழப்பாடி ஆகிய வட்டாரங்களில் மக்காச்சோளம், 42,200 ஹெக்டேரிலும், பருத்தி, 2,500 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோளம், பருத்தி பயிருக்கு காப்பீடு செய்தால், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் பாதிப்புகளுக்கு மகசூல் கணக்கீட்டின்படி, உரிய காப்பீடு தொகை பெறலாம்.
பிரிமீய தொகையாக ஒரு ஏக்கர் மக்காச்சோளத்துக்கு 482 ரூபாய், பருத்திக்கு, 680 ரூபாய் செலுத்தி காப்பீடு பெற, அக்., 31(நாளை) கடைசி நாளாகும். அதனால் விவசாயிகள், நடப்பு சேமிப்பு கணக்கு வங்கி புத்தக நகல், ஆதார் நகல், பயிர் சாகுபடி அடங்கல், பூர்த்தி செய்த விண்ணப்பம், முன்மொழிவு படிவம் உள்ளிட்டவற்றுடன், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள், பொது சேவை மையங்கள் மூலம், பிரிமீய தொகையை செலுத்தி பயிர் காப்பீடு பெறலாம். விபரம் பெற, வட்டார வேளாண் விரிவாக்க மைய வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என, சேலம் வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

