/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியருக்கு அனுமதி
/
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியருக்கு அனுமதி
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியருக்கு அனுமதி
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியருக்கு அனுமதி
ADDED : டிச 12, 2024 07:28 AM
ஆத்துார்: ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம், கல்வ-ராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. முட்டல் ஏரி, ஆணைவாரி நீர்வீழ்ச்சி, வனத்துறையின் சூழல் சுற்றுலா மைய திட்டத்தில் செயல்படுகிறது. கல்வராயன்மலை பகுதியில் பெய்த மழையால், கடந்த, 2 முதல், ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் அதிகளவில் தண்ணீர் வந்தது. இதனால் சுற்றுலா பயணியருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 9 நாட்களுக்கு பின், நேற்று முதல், சுற்றுலா பய-ணியர் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், சுற்றுலா பயணியர் குளிக்-கவும், பூங்காவுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என்றனர்.