/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணியருக்கு தடை
/
நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணியருக்கு தடை
ADDED : மே 19, 2024 02:31 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே, கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு வனத்துறை சூழல் சுற்றுலா திட்டத்தில் முட்டல் ஏரியில் படகு சவாரி, பூங்கா, ஆணைவாரி நீர் வீழ்ச்சி உள்ளது.
கடந்த, 15ல் ஆத்துாரில் விடிய, விடிய பெய்த கன மழையால் கல்வராயன்மலை நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் வானிலை மையம், அதிக மழை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் ஆணைவாரி நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முட்டல் ஏரி, பூங்காவும் நேற்று முதல் மூடப்பட்டதாக, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, ஆத்துார் வனக்கோட்ட அலுவலர் ஆரோக்யராஜ் சேவியர் அறிவித்துள்ளனர்.
முட்டல் ஏரி, ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை மூடப்பட்டு, வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

