/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'குளுகுளு' ஏற்காட்டை ரசித்த சுற்றுலா பயணியர்
/
'குளுகுளு' ஏற்காட்டை ரசித்த சுற்றுலா பயணியர்
ADDED : செப் 01, 2025 04:10 AM
ஏற்காடு: ஏற்காட்டில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ், ஜென்ஸ் சீட்டுகள், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட இடங்களை கண்டுகளித்தனர். தொடர்ந்து படகு இல்லத்துக்கு சென்ற சுற்றுலா பயணியர், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இந்நிலையில் மாலை, 5:10 மணிக்கு ஏற்-காடு, சுற்றுவட்டார பகுதிகளில், இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. 6:40 மணி வரை பெய்த மழையால், 'குளுகுளு' என ஏற்காடு மாற, சுற்றுலா பயணியர் ரசித்தனர்.
ரூ. 2.80 லட்சம் வசூல்விநாயகர் சதுர்த்தி முடிந்த நிலையில் கடந்த, 5 நாட்களாக சிலை-களை கரைக்க, ஏராளமான பக்தர்கள் மேட்டூர் வந்தனர். அவர்கள் தொடர்ந்து மேட்டூர் அணை மற்றும் பூங்காவை சுற்றி பார்த்தனர். கடந்த, 29ல், 6,897 பயணியர், அணை மற்றும் பூங்காவை பார்-வையிட்டனர். அவர்கள் மூலம் நுழைவு கட்டணம், மொபைல் கட்டணம், பவளவிழா கோபுர கட்டணம் என, 89,780 ரூபாய் வசூலானது. நேற்று முன்தினம், 3,169 பயணியர் மூலம், 49,880 ரூபாய், நேற்று, 11,069 பயணியர் மூலம், 1,41,290 ரூபாய் என, 3 நாட்களில் நீர்வளத்துறைக்கு, 2,80,950 ரூபாய் வசூலானது.