sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இயற்கையின் அதிசயம் 'பனிமூட்டம்' இதமாக ரசித்த சுற்றுலா பயணியர்

/

இயற்கையின் அதிசயம் 'பனிமூட்டம்' இதமாக ரசித்த சுற்றுலா பயணியர்

இயற்கையின் அதிசயம் 'பனிமூட்டம்' இதமாக ரசித்த சுற்றுலா பயணியர்

இயற்கையின் அதிசயம் 'பனிமூட்டம்' இதமாக ரசித்த சுற்றுலா பயணியர்


ADDED : ஆக 18, 2025 03:26 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். கடந்த, 15ல் சுதந்திர தினத்தை ஒட்டி தொடர் விடு-முறையின் கடைசி நாளான நேற்று, ஏற்காட்டில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள், அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட்டுகள், பொட்டா-னிக்கல் கார்டன், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் உள்-ளிட்ட இடங்களை குடும்பத்துடன் கண்டுகளித்தனர்.

மதியம், 2:50 மணிக்கு சிறிது நேரம் மழை பெய்தது. தொடர்ந்து, 3:05 மணிக்கு ஏற்காடு முழுதும் பனிமூட்டம் சூழ்ந்-தது. இதனால் ஏற்காடு முழுவதும் வெள்ளை போர்வை போர்த்தி-யது போன்று, அருகே உள்ளவர்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்-டது.

வாகன ஓட்டிகள், மெதுவாகவே சென்றனர். ஏற்காடு, 'குளு-குளு' என மாறியது. இந்த இதமான சூழலை, சுற்றுலா பயணியர் மிகவும் ரசித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். முக்கிய-மாக படகு இல்லத்தில், சுற்றுலா பயணியர் மழையில் நனைந்த

படி, ஏரியை சூழ்ந்த பனிமூட்டத்தை ரசித்தபடி படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் மாலையில் தொடர்ந்து, ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டத்துடன்

மழை பெய்தது.






      Dinamalar
      Follow us