ADDED : ஜன 17, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: காணும் பொங்கலையொட்டி, சேலம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது. மான், முதலை, மலைப்பாம்பு, வண்ணப்பறவைகள், வெள்ளை மயில் உள்ளிட்ட உயிரினங்களை கண்டுகளித்தனர். குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். மேட்டூர் அணை பூங்காவில் ஏராளமானோர் குவிந்தனர். பெரும்பாலான சுற்றுலா பயணியர், குழந்தைகளுடன் வந்து, அணை பூங்கா திடலில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பலர், அணை பூங்கா அருகே காவிரியாற்றில் நீராடினர்.
பூலாம்பட்டி காவிரி ஆற்றில் உள்ள படகுகளில் பயணித்து, ஏராளமான சுற்றுலா பயணியர் மகிழ்ந்தனர். ஆத்துார், கல்லாநத்தம் ஊராட்சி, முட்டலில் உள்ள ஆணைவாரி நீர் வீழ்ச்சியில், ஏராளமான சுற்றுலா பயணியர் குளித்தனர். அங்குள்ள பூங்காவை ரசித்து முட்டல் ஏரியில் படகு சவாரி செய்தனர்.