/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிளியூர் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணியர்
/
கிளியூர் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணியர்
கிளியூர் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணியர்
கிளியூர் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணியர்
ADDED : நவ 04, 2024 05:50 AM
ஏற்காடு: ஏற்காட்டில் சில நாட்களாக பெய்து வரும் மழையால், படகு இல்ல ஏரியில் இருந்து, 2 கி.மீ.,ல் உள்ள கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் தீபாவளி தொடர் விடுமுறைக்கு ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர் ஏராளமானோர் நேற்று, கிளயூர் நீர்வீழ்ச்சியில் குளித்தும், போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர்.
மேலும் ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் ஏற்காடு போலீசார், நெரிசலின்போது குப்பனுார் மலைப்பாதை வழியே வாகனங்கள் சென்று வரும்படி போக்குவரத்தை திருப்பிவிட்டனர். இதனால் கடும் நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்தை சரிசெய்தனர்.