/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொடர் விடுமுறையால் கொல்லிமலைக்குபடையெடுத்த சுற்றுலா பயணிகள் குதுாகலம்

ADDED : ஏப் 01, 2025 01:46 AM
தொடர் விடுமுறையால் கொல்லிமலைக்குபடையெடுத்த சுற்றுலா பயணிகள் குதுாகலம்
சேந்தமங்கலம்:தொடர் விடுமுறையால், சுற்றுலா தலமான கொல்லி மலைக்கு படையெடுத்த மக்கள், அருவிகளில் குளி த்தும், படகு சவாரி செய்தும் குதுாகலமடைந்தனர்.
தமிழகத்தின் சுற்றுலா தலமாக, நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை அமைந்துள்ளது. அரிய வகை மூலிகைகள் நிறைந்த இந்த மலைக்கு, சுற்றுலா பயணிகள் விடுமுறையில் அதிகளவில் வந்து செல்கின்றனர். நகர வாழ்க்கையில் சிக்கி தவிக்கும் மக்கள், துாய்மையான காற்று, தண்ணீரில் குளித்து மகிழ இதுபோன்ற இயற்கை சூழ்ந்த மலைகளுக்கு வந்து செல்கின்றனர்.
அதன்படி, ரம்ஜான் பண்டிகையையொட்டி, தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு படையெடுத்தனர். கொல்லிமலைக்கு குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வந்தவர்கள், வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி பாதையில் செல்லும்போதே ஒருவித மகிழ்ச்சியை அனுபவித்தனர்.
அதற்கும் மேலாக, மாசிலா அருவி, நம்மருவி, ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். பின், வாசலுார்பட்டியில் உள்ள படகு இல்லத்தில் பரிசல் சவாரி செய்து குதுாகலமடைந்தனர். இதையடுத்து, அரப்பளீஸ்வரர் கோவில், மாசி பெரியசாமி கோவில், எட்டுக்கையம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மன அமைதியுடன் வீட்டுக்கு சென்றனர்.