/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணியர்
/
மேட்டூர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணியர்
ADDED : ஆக 11, 2025 08:24 AM
மேட்டூர்: மேட்டூரில் நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். குறிப்பாக காவிரி ஆற்றில் நீராடிய சுற்றுலா பயணியர், தொடர்ந்து அணை அடிவாரத்தில் உள்ள முனியப்பனை தரிசனம் செய்தனர். பெரும்பாலோர், ஆடு, கோழிகளை பலியிட்டு முனியப்பன் கோவில் வளாகத்தில் சமைத்து சாப்பிட்டனர். பின் மேட்டூர் அணை பூங்காவை பார்வையிட்டனர்.
குறிப்பாக, 8,930 சுற்றுலா பயணி யர் பார்வையிட்டனர். அவர்களது நுழைவு கட்டணம், மொபைல், கேமரா, பவளவிழா கோபுரம் உள்ளிட்ட கட்டணமாக, 1,36,520 ரூபாய் கட்டணம் வசூலானது.
நீர்வரத்து சரிவுமேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 13,483 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 9,200 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 14,000 கனஅடி நீர் பாசனத்துக்கும், 500 கனஅடி நீர் கால்வாயிலும் வெளியேற்றப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக உள்ளதால், நேற்று முன்தினம், 118.87 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று, 118.54 அடியாக சரிந்தது.
பரிசல் சவாரிஇதனால் பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில், கிராமத்தின் எல்லை வரை தண்ணீர் தேங்கியிருந்தது. அங்குள்ள பரிசல் துறைக்கும், ஏராளமான சுற்றுலா பயணியர், பஸ், கார், இருசக்கர வாகனங்களில் சென்றனர். குடும்பத்துடன் சென்ற சுற்றுலா பயணியர், அங்கு மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தும் பரிசலில், நீர்பரப்பு பகுதியை சென்று பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கு மீனவர்கள், பயணியர் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் வசூலித்தனர்.