/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்
/
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்
ADDED : ஏப் 20, 2025 01:40 AM
ஏற்காடு:
பள்ளிகளில் ஆண்டு தேர்வு நிறைவடைந்து கோடை விடுமுறை தொடங்கியது. அத்துடன் இன்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நேற்று முன்தினம் முதல், 3 நாள் தொடர் விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் மாலை முதலே, ஏற்காட்டுக்கு அதிகளவில் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். நேற்றும் ஏராளமான
சுற்றுலா பயணியர் வந்தனர். அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். முக்கியமாக படகு இல்லத்தில் காலை முதலே சுற்றுலா பயணியர் குவிந்தனர். பயண சீட்டு வாங்கி வெகு நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.