/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர் போக்குவரத்து நெரிசலால் அவதி
/
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர் போக்குவரத்து நெரிசலால் அவதி
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர் போக்குவரத்து நெரிசலால் அவதி
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர் போக்குவரத்து நெரிசலால் அவதி
ADDED : ஆக 17, 2025 02:25 AM
ஏற்காடு ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் முதல், 3 நாட்கள் தொடர் விடுமுறையால், நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர்.
படகு இல்லம், அண்ணா, ஏரி, சூழல் சுற்றுலா பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆர்வமாக கண்டுகளித்தனர்.ஆனால் காலை முதலே சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்ததால், வாகனங்களை நிறுத்த இடமின்றி, அண்ணா பூங்கா, ஏரி பூங்கா சாலை ஓரங்களில் நிறுத்தினர். இதனால் அச்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணியர் அவதிக்கு ஆளாகினர். முன்கூட்டியே போலீஸ் துறையினர் திட்டமிட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்திருந்தால் நெரிசல் ஏற்பட்டிருக்காது.மேலும் சேலத்தில் நடந்து வரும், இ.கம்யூ., மாநாட்டு பாதுகாப்புக்கு போலீசார் சென்றுவிட்டனர். இதனால் ஏற்காட்டில் போலீசார் இல்லாத நிலை ஏற்பட்டு, ஓரிரண்டு போலீசார் மட்டும் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் நெரிசலை தவிர்க்க முடியவில்லை. அதேநேரம், வாகனங்கள் நிறுத்த, 'கார் பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணியர் வலியுறுத்தினர்.