/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் வரவேற்கும் 'துர்நாற்றம்' முகம் சுளிக்கும் சுற்றுலா பயணியர்
/
ஏற்காட்டில் வரவேற்கும் 'துர்நாற்றம்' முகம் சுளிக்கும் சுற்றுலா பயணியர்
ஏற்காட்டில் வரவேற்கும் 'துர்நாற்றம்' முகம் சுளிக்கும் சுற்றுலா பயணியர்
ஏற்காட்டில் வரவேற்கும் 'துர்நாற்றம்' முகம் சுளிக்கும் சுற்றுலா பயணியர்
ADDED : பிப் 03, 2025 07:17 AM
ஏற்காடு: ஏற்காடு ஒன்றிய அலுவலகம் எதிரே, பிளாஸ்டிக் மறுசுழற்சி மையம், குப்பை கிடங்கு உள்ளது. அங்கு ஏற்காட்டில் இருந்து சேகரிக்கும் குப்பை, தங்கும் விடுதி, உணவகங்களில் சேகரிக்கப்படும் குப்பையை, துாய்மை பணியாளர்கள் கொட்டி, ஊராட்சி நிர்வாகம் மூலம் மட்கும், மட்காத குப்பை என பிரிக்கின்றனர். தொடர்ந்து பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்கின்றனர். உணவு கழிவால் பயோ-காஸூம் தயாரிக்கப்பட்டது. சில மாதங்களாக இப்பணி நடக்காததால், அங்கு அதிக அளவில் குப்பை குவிந்துள்ளது.
குப்பை கிடங்கு, ஊராட்சி தலைவர் நடவடிக்கையால் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது உள்ளாட்சி அமைப்பு இல்லாத நிலையில், தனி அலுவலர் கண்டுகொள்ளவில்லை. இதனால் குப்பை சேகரிக்கும் பணியாளர்கள், குப்பையை கிடங்கின் உள்ளே கொட்டாமல், அதன் நுழைவாயிலில் பிரதான சாலை அருகே கொட்டி வருகின்றனர்.
இதனால் சுற்றுலா பயணியர், ஏற்காட்டில் நுழையும்போதே, குப்பை கிடங்கில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் முகம் சுளிக்கின்றனர். அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவியர், அரசு அலுவலகங்களுக்கு வருவோர், அதைச்சுற்றி உள்ள, 30க்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்குவோரும், துர்நாற்றத்தால் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக குப்பையில் இருந்து மழைக்காலங்களில் வழிந்தோடும் கழிவுநீர் சாலைகளில் ஓடி, ஓடைகள் வழியே கிளியூர் நீர்வீழ்ச்சியில் கலக்கிறது. இதை அறியாமல், சுற்றுலா பயணியர் குளிப்பதால், தோல் சம்பந்தப்பட்ட பாதிப்பு உருவாக வாய்ப்புள்ளது. இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் வலியுறுத்தினர்.

