/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்: மலர் கண்காட்சி எப்போது?
/
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்: மலர் கண்காட்சி எப்போது?
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்: மலர் கண்காட்சி எப்போது?
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்: மலர் கண்காட்சி எப்போது?
ADDED : ஏப் 29, 2024 07:05 AM
ஏற்காடு : ஏற்காட்டில் சுற்றுலா பயணியர் குவிந்த நிலையில், மலர் கண்காட்சி நாளை அறிவிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
ஏற்காட்டில் மே மாதத்தில் கோடை விழா, மலர் கண்காட்சி நடத்தப்படும். அதற்கு அங்குள்ள தோட்டக்கலை துறையினர், முதல் கட்ட பணியாக சில மாதங்களுக்கு முன் அண்ணா, தாவரவியல் பூங்காக்கள், ரோஸ் கார்டன் ஆகிய இடங்களில் பால்சம், ஜினியா, சால்வியா, கிரை சாந்தியம், ஜெரேனியம், பேன்சி, பெட்டுனியா, மேரிகோல்ட், ஆஸ்டர், கைலார்டியா உள்பட, 40 வகை மலர்களை கொண்டு, 2 லட்சம் மலர் செடிகளின் விதைகளை நடும் பணியை தொடங்கினர்.
'ஏற்காடு ரோஜா' என அழைக்கப்படும் டேலியா செடிகள், 4,000 கோல்கட்டாவில் இருந்து வரவழைக்கப்பட்டு, தொட்டிகளில் நடவு செய்யப்பட்டன. நடவு செய்யப்பட்ட விதைகள் செடிகளாக வளர்ந்து பூக்கள் மொட்டு விட தொடங்கியுள்ளன. இன்னும் சில நாட்களில் பூக்கும் நிலையில் உள்ளன. இதனால் அண்ணா பூங்கா நிர்வாகத்தினர், அந்த பூந்தொட்டிகளை, பூங்காவின் பல்வேறு இடங்களில் மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.
மேலும் பள்ளிகளில் தேர்வு முடிந்ததால், பலரும் கோடை விடுமுறையை கொண்டாட, ஏற்காட்டுக்கு வந்தபடி உள்ளனர். நேற்று ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். அவர்கள், அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம் ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்தனர். படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனால் மாவட்ட நிர்வாகம், மலர் கண்காட்சி நாளை அறிவிக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர், உள்ளூர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

