/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3 மாதமாக கழிப்பறைக்கு பூட்டு சுற்றுலா பயணியர் அவதி
/
3 மாதமாக கழிப்பறைக்கு பூட்டு சுற்றுலா பயணியர் அவதி
3 மாதமாக கழிப்பறைக்கு பூட்டு சுற்றுலா பயணியர் அவதி
3 மாதமாக கழிப்பறைக்கு பூட்டு சுற்றுலா பயணியர் அவதி
ADDED : ஜன 06, 2025 02:32 AM
ஏற்காடு: ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
அங்கு ஒண்டிக்கடையில் இருந்து, 2 கி.மீ.,ல் உள்ள அரசு தாவரவியல் பூங்காவுக்கும், சுற்றுலா பயணியர் அதிக-ளவில் வந்து செல்கின்றனர். அந்த பூங்காவை சுற்றிப்பார்க்க நுழைவு கட்டணமாக பெரியவருக்கு, 50 ரூபாய், சிறியவர்க-ளுக்கு, 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அங்கு பெரும்-பாலான இடங்கள் சரிவர பராமரிக்கப்படாமல் புதர் மண்டியுள்-ளது. குழந்தைகள் விளையாடும் இடத்தில் பராமரிப்பு இல்லை. கழிப்பிடம், குடிநீர் வசதி இல்லாததால், சுற்றுலா பயணியர் சிர-மத்துக்கு ஆளாகின்றனர். அங்குள்ள கழிப்பிடம், 3 மாதங்களுக்கு மேலாக பராமரிப்பின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை வசதிகளை செய்வதோடு, பூங்காவை முறையாக பரா-மரிக்க, தோட்டக்கலை, மலை பயிர்கள் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

