/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டவுன் பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
/
டவுன் பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
ADDED : மார் 17, 2024 02:14 PM
கெங்கவல்லி:  கெங்கவல்லி அருகே தெடாவூர் டவுன் பஞ்சாயத்தில், 'அம்ருத் 2.0' திட்டத்தில், 10.75 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் குழாய்கள், இரு மேல்நிலை தொட்டிகள் அமைப்பதற்கான பணிகள் நடக்கின்றன.
இந்த தொட்டிகளில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. அப்போது குடிநீர் இணைப்புகளில் மீட்டர் வைத்து கட்டணம் வசூலிப்பதாக தகவல் வெளியானதால், அப்பணிகளை மக்கள் தடுத்து நிறுத்தினர்.இதுகுறித்து தி.மு.க.,வை சேர்ந்த, டவுன் பஞ்சாயத்து தலைவர் வேலிடம், மக்கள் கூறியும் பலனில்லை. இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணிக்கு, டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை, மக்கள் முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செயல் அலுவலர் மாதவன், கெங்கவல்லி போலீசார் பேச்சு நடத்தி, 'உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்தனர். பின் மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் ஆத்துார் - பெரம்பலுார் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

