/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டவுன் பஞ்.,ல் ஏலம் போகாத காய்கறி சந்தை, சைக்கிள் ஸ்டாண்ட்
/
டவுன் பஞ்.,ல் ஏலம் போகாத காய்கறி சந்தை, சைக்கிள் ஸ்டாண்ட்
டவுன் பஞ்.,ல் ஏலம் போகாத காய்கறி சந்தை, சைக்கிள் ஸ்டாண்ட்
டவுன் பஞ்.,ல் ஏலம் போகாத காய்கறி சந்தை, சைக்கிள் ஸ்டாண்ட்
ADDED : அக் 23, 2025 02:08 AM
வாழப்பாடி, ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில், சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்ட சைக்கிள் ஸ்டாண்ட், காய்கறி சந்தை, 8 மாதங்களுக்கு மேலாகியும் ஏலம் போகவில்லை.
சேலம் மாவட்டம் வாழப்பாடி டவுன் பஞ்சாயத்தில், 8.70 கோடி ரூபாய் மதிப்பில், சைக்கிள் ஸ்டாண்ட், 36 கடைகள் அடங்கிய தினசரி காய்கறி சந்தையுடன், ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட், 4 ஆண்டாக கட்டப்பட்டு, கடந்த பிப்., 22ல், அமைச்சர்கள் நேரு, ராஜேந்திரன் திறந்து வைத்தனர்.
தற்போது, 8 மாதங்களுக்கு மேலாகியும், பஸ் ஸ்டாண்ட் மேல் தளத்தில் கட்டப்பட்ட சைக்கிள் ஸ்டாண்ட், தினசரி காய்கறி சந்தையை யாரும் ஏலம் எடுக்காததால், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் மேல் தளம், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இதுகுறித்து, அ.தி.மு.க.,வின், வாழப்பாடி நகர இளைஞரணி செயலர் வெங்கடேசன் கூறுகையில், ''பஸ் ஸ்டாண்டை தரைத்தளத்தில் வைத்துவிட்டு, சரியான திட்டமிடல் இல்லாமல், காய்கறி சந்தை, சைக்கிள் ஸ்டாண்ட் மேல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அங்கு செல்ல வாய்ப்பு குறைவுதான்,'' என்றார்.
பா.ம.க., ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் முருகன் கூறுகையில், ''டிபாசிட் தொகை அதிகளவில் நிர்ணயிக்கப்பட்டதால், ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை,'' என்றார்.
டவுன் பஞ்., செயல் அலுவலர் சிவராஜ் கூறுகையில், ''ஏல நாள் குறிப்பிட்டு எட்டு மாதங்களாக விளம்பரம் செய்தும் யாரும் கோரவில்லை. சைக்கிள் ஸ்டாண்டுக்கு டிபாசிட் தொகை, 2 லட்சம் ரூபாய், சந்தையில் ஒரு கடைக்கு, 10,000 ரூபாய். 36 கடைகளுக்கு சேர்த்து, 2 லட்சம் ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் யாரும் ஏலம் கேட்க முன்வரவில்லை,'' என்றார்.