/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இ.பி.எஸ்.,க்கு டிராக்டர் பரிசு அ.தி.மு.க., நிர்வாகிகள் முடிவு
/
இ.பி.எஸ்.,க்கு டிராக்டர் பரிசு அ.தி.மு.க., நிர்வாகிகள் முடிவு
இ.பி.எஸ்.,க்கு டிராக்டர் பரிசு அ.தி.மு.க., நிர்வாகிகள் முடிவு
இ.பி.எஸ்.,க்கு டிராக்டர் பரிசு அ.தி.மு.க., நிர்வாகிகள் முடிவு
ADDED : நவ 14, 2024 07:42 AM
மேட்டூர்: மேட்டூர் அணை உபரிநீர் மூலம் சேலம் மாவட்டத்தின், 100 வறண்ட ஏரிகளை நிரப்ப, அப்போதைய முதல்வரான, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., நடவடிக்கை எடுத்தார். அதற்கு விவசாயிகள் சார்பில்,
இ.பி.எஸ்.,க்கு பாராட்டு விழா வரும், 17ல் மேச்சேரியில் நடக்க உள்ளது. அதில் மேட்டூர் தாலுகா, அ.தி.மு.க., நிர்வாகிகள், 25 பேர் இ.பி.எஸ்.,க்கு டிராக்டர் பரிசளிக்க முடிவு செய்தனர். அந்த டிராக்டரை, மேச்சேரி
பத்ரகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்த பின், பாராட்டு விழா நடக்கவுள்ள இடத்துக்கு கொண்டு சென்றனர். இதில் மாநில ஜெ., பேரவை துணை செயலர் கலையரசன், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் எமரால்டு வெங்கடாசலம், இணை செயலர் மணிவண்ணன், வக்கீல் அணி மாவட்ட செயலர் சித்தன், மாவட்ட மகளிர் அணி
செயலர் லலிதா, மேச்சேரி பேரூர் செயலர் குமார், மேச்சேரி கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலர்கள் சந்திரசேகரன், செல்வம், அண்ணா தொழிற்சங்க டாஸ்மாக் மாவட்ட துணை செயலர் பர்குணன் உள்ளிட்ட, அ.தி.மு.க.,
நிர்வாகிகள் பங்கேற்றனர்.