/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வணிகர் சங்க பேரமைப்பு ஆர்ப்பாட்டம் ரூ.50 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

ADDED : டிச 12, 2024 07:22 AM
சேலம்: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு, சேலம் மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைந்து, சேலம் கோட்டை மைதா-னத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேரமைப்பின் சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார்.
அதில் கடைகளின் வாடகை மீதான, 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்; வணிக நிறுவனங்களுக்கு சொத்து வரி, குப்பை வரி உள்ளிட்டவற்றை சேலம் மாந-கராட்சி திரும்ப பெறல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், மாவட்ட செயலர் வர்க்கீஸ் இளையபெருமாள், பொருளாளர் சந்திரதாசன் உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் மாவட்ட மளிகை வியாபாரிகள், சேலம் மாநகர தாவர எண்ணெய் வணிகர்கள், செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் மளிகை மற்றும் ஷாப் வர்த்தகர்கள், சேலம் கைத்தறி ஜவுளி மொத்த வியாபாரிகள், சேலம் அரிசி
ஆலை உரிமையாளர்கள் உள்பட, 50க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.இதுகுறித்து பெரிய சாமி கூறுகையில், ''மத்திய, மாநில அரசுக-ளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும்படி காலை முதல் மதியம் வரை கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இதனால், 50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்
பாதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.