/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இடைப்பாடி - குமாரபாளையம் சாலையில் போக்குவரத்துக்கு தடை
/
இடைப்பாடி - குமாரபாளையம் சாலையில் போக்குவரத்துக்கு தடை
இடைப்பாடி - குமாரபாளையம் சாலையில் போக்குவரத்துக்கு தடை
இடைப்பாடி - குமாரபாளையம் சாலையில் போக்குவரத்துக்கு தடை
ADDED : டிச 05, 2024 08:00 AM
இடைப்பாடி: இடைப்பாடி - குமாரபாளையம் சாலையில் ஆற்று நீர் புகுந்-ததால், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு மக்கள் சுற்றிச்-சென்றனர்.
சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சேலம் மாவட்டம் இடைப்பாடியில் இருந்து, குமாரபாளையம்
செல்லும் மாநில நெடுஞ்சாலையான, செட்டிப்பட்டி சாலையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு
அதிகளவில் தண்ணீர் புகுந்தது. 4 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியதால் அந்த வழியே அனைத்து வகை
வாகனங்கள் செல்லவும், வருவாய்த்துறையினர் தடை விதித்தனர். பள்ளி, கல்லுாரி பஸ்கள் உள்ளிட்ட
வாகனங்-களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. மாநில நெடுஞ்-சாலையில் தண்ணீர் தேங்கியதால், 5
கி.மீ., சுற்றிச்செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.கரை சீரமைப்புகாடையாம்பட்டி, சந்தைப்பேட்டை முனியப்பன் கோவில் எதிரே, சரபங்கா ஆற்றின் குறுக்கே உள்ள மண் திட்டு
கரையை கடந்து, விவசாயிகள் பலர் வேலைக்கு சென்று வருகின்றனர். அந்த கரையின் அடியில் பிரமாண்ட
குழாய்கள் மூலம் தண்ணீர் வெளியேறி வருகிறது. சில நாட்களாக அதிகளவு தண்ணீர் சென்-றதால் நேற்று
காலை, மண் திட்டு கரையின் ஒரு பகுதியில் அரிப்பு ஏற்பட்டு, யாரும் அந்த வழியை பயன்படுத்த முடியாத நிலை
ஏற்பட்டது. இதை அறிந்த, காடையாம்பட்டி டவுன் பஞ்சா-யத்து அதிகாரிகள், நேற்று மதியம், மண் கொட்டி
சீரமைப்பு பணியை மேற்கொண்டனர்.