/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாழப்பாடியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
/
வாழப்பாடியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
ADDED : மே 18, 2025 05:37 AM
வாழப்பாடி: வாழப்பாடி அருகே முத்தம்பட்டி கேட் பகுதியில் ரயில்வே மேம்பால பணி நடக்கிறது. இதனால், வாழப்பாடியில் இருந்து சேலம் வரும் வாகனங்கள், சேலத்தில் இருந்து வாழப்பாடி செல்லும் வாகனங்களும், தம்மம்பட்டி நெடுஞ்சாலை வழியே இயக்கப்படுகின்றன.
இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ரயில்வே கேட் போடும் போது, நெரிசலை தவிர்க்க முடியவில்லை. இதனால் நாளை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாழப்பாடி டி.எஸ்.பி., சுரேஷ்குமார் கூறியதாவது: வாழப்பாடிக்குள் லாரி, கனரக வாகனங்கள் தேவையின்றி வரக்கூடாது. மீறினால் வழக்கு பதிவு செய்யப்படும். சேலத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் அரசு, தனியார் பஸ்கள், தம்மம்பட்டி நெடுஞ்சாலை வழியே சென்று வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷன் அருகே பயணியரை இறக்கிவிட்டு, ஆத்துார் செல்ல வேண்டும்.
ஆத்துாரில் இருந்து சேலம் வரும் அரசு, தனியார் பஸ்கள், வாழப்பாடி பஸ் ஸ்டாண்டுக்கு சென்று பயணியரை இறக்கிவிட்டு, மீண்டும் வந்த வழியே சென்று, மத்துார் வழியே தேசிய நெடுஞ்சாலையில் சேலம் செல்ல வேண்டும். சேலம் செல்லும் பஸ்கள், தம்மம்பட்டி நெடுஞ்சாலை வழியே செல்லக்கூடாது. சேலம், ஆத்துார் செல்லும் டவுன் பஸ்கள் வழக்கம் போல் செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.