/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழை விட்டும் வெள்ளம் தரைப்பால சேதம் அதிகரிப்பால் போக்குவரத்து துண்டிப்பு
/
மழை விட்டும் வெள்ளம் தரைப்பால சேதம் அதிகரிப்பால் போக்குவரத்து துண்டிப்பு
மழை விட்டும் வெள்ளம் தரைப்பால சேதம் அதிகரிப்பால் போக்குவரத்து துண்டிப்பு
மழை விட்டும் வெள்ளம் தரைப்பால சேதம் அதிகரிப்பால் போக்குவரத்து துண்டிப்பு
ADDED : டிச 08, 2024 04:04 AM
வீரபாண்டி: மழை விட்டும் திருமணிமுத்தாற்றில் குறையாத வெள்ள நீரால் தரைப்பால சேதம் மேலும் அதிகரித்து போக்குவரத்து துண்டிக்கப்-பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வீரபாண்டி, இனாம் பைரோஜி ஊராட்சி புதுப்-பாளையத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் மின்னக்கல் செல்லும் வழியில், திருமணிமுத்தாற்றின் குறுக்கே, 40 ஆண்டுக-ளுக்கு முன் கட்டப்பட்ட தரைப்பாலம் உள்ளது.ஆனால் முறையான பராமரிப்பின்றி, ஆங்காங்கே விரிசல், பள்-ளங்கள் ஏற்பட்டுள்ளன. இரு மாதங்களுக்கு முன், ஆற்றில் ஏற்-பட்ட வெள்ளப்பெருக்கால், நாமக்கல் மாவட்ட எல்லை இணைப்பு பகுதியில் பாலம் உடைந்து, பள்ளம் விழுந்தது. இதனால், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும் சென்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால், மீண்டும் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியது. வழக்கமாக ஓரிரு நாட்களில் நீர்வரத்து குறைந்து போக்குவரத்து சீராகும். தற்போது, 6 நாட்களுக்கு மேலாகியும் வெள்ள நீர் குறையாமல் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்கி-றது. மேலும் நாமக்கல் மாவட்ட இணைப்பு பகுதி பள்ளம், அரிப்பால் மேலும் பெரிதாகி, முழுதும் அடித்துச்செல்லப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
தவிர அதன் அருகே மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் வெள்ளத்தில் அடித்துச்செல்லும் அபாயத்தில் உள்ளது. அதனால் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டும் பணியை விரைந்து மேற்-கொள்ள, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.