/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் போக்குவரத்து போலீசார் நுாதன முறையில் விழிப்பு-ணர்வு
/
சேலத்தில் போக்குவரத்து போலீசார் நுாதன முறையில் விழிப்பு-ணர்வு
சேலத்தில் போக்குவரத்து போலீசார் நுாதன முறையில் விழிப்பு-ணர்வு
சேலத்தில் போக்குவரத்து போலீசார் நுாதன முறையில் விழிப்பு-ணர்வு
ADDED : ஜன 21, 2025 06:12 AM
சேலம்: ஆண்டுதோறும் ஜனவரி மாதம், சாலை பாதுகாப்பு வார விழா நடந்து வருகிறது. இந்தாண்டு சாலை பாதுகாப்பு வார விழா, நேற்று துவங்கியது. வரும் 27 வரை நடைபெறுகிறது. அதன்படி சேலம் மாநகர் காவல்துறை சார்பில், அஸ்தம்பட்டி பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கூடுதல் துணை கமிஷனர் ரவிசந்திரன், போக்குவரத்து இன்ஸ்-பெக்டர் வெங்கடாஜலம் ஆகியோர், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அறி-வுரை வழங்கினர். இந்நிலையில், இரு
சக்கர வாகனத்தில் ெஹல்மெட் அணியாமல் வந்த, ஒருவர் சாலையில் விபத்து ஏற்-பட்டு, கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழப்பதை போன்றும், அங்கு காத்திருந்த எமதர்மராஜா பாச கயிற்றை போட்டு, உயிரை
பறிப்பது போன்றும் தத்ரூபமாக நடித்த காட்சி மக்களிடையே வரவேற்பை பெற்றது.இது குறித்து, கூடுதல் துணை கமிஷனர் ரவிசந்திரன் கூறு-கையில்,''ஆண்டுதோறும் இரு சக்கர வாகன விபத்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஹெல்மெட் அணியாமல் செல்வதேயாகும். முக்கியமான
சாலைகளில் அதிநவீன 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதால், ஹெல்மெட் அணி-யாமல் சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு விபத்தில்லா ஆண்டாக இருக்க, பொதுமக்கள் ஒத்து-ழைப்பு
வழங்கி, ஹெலமெட் இல்லாமல் வாகனம் ஓட்ட-மாட்டேன் என, அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்,'' என்றார்.

