/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சரபங்கா ஆற்று நீர் வடிந்ததால் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்
/
சரபங்கா ஆற்று நீர் வடிந்ததால் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்
சரபங்கா ஆற்று நீர் வடிந்ததால் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்
சரபங்கா ஆற்று நீர் வடிந்ததால் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்
ADDED : டிச 06, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இடைப்பாடியில் இருந்து குமாரபாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையான செட்டிப்பட்டி சாலையில், கடந்த, 3 இரவு, அதிகளவு தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த வழியே போக்குவரத்துக்கு, வருவாய்த்துறையினர் தடை விதித்தனர். இதனால் மாற்றுப்பாதையில் மக்கள் சுற்றிச்சென்றனர்.
இந்நிலையில் நேற்று சாலையில் தேங்கிய தண்ணீர் வடிந்தது. இதனால் காலை முதல், மீண்டும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், அந்த வழியே இயக்கப்பட்டன. அதேபோல் நேற்று முன்தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்த, செட்டிப்பட்டி தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி நேற்று செயல்பட்டன.