/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சூரிய ஆற்றல் பயன்பாடு விவசாயிகளுக்கு பயிற்சி
/
சூரிய ஆற்றல் பயன்பாடு விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஆக 14, 2025 03:38 AM
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் வட்டாரம், வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் கீழ், வேளாண்மைத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் சூரிய ஆற்றல் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமை வகித்தார்.
அவர், சூரிய சக்தி பயன்கள் மற்றும் வேளாண்மைத்துறை மானிய திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். மேலும், சூரிய ஆற்றல் வேளாண்மைத்துறை மற்றும் இதர துறைகளில் பயன்படுத்தப்படும் விதம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
பயிற்சியில், விவசாயிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் அட்மா திட்ட அலுவலர் கலையரசி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.