/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுதானிய உற்பத்தி மகளிருக்கு பயிற்சி
/
சிறுதானிய உற்பத்தி மகளிருக்கு பயிற்சி
ADDED : ஆக 20, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, ச.ஆ.பெரமனுார் ஊராட்சியில், உழவர் ஆர்வலர் குழு மகளிருக்கான சிறுதானிய உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத் தலைமை வகித்து, சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பம், அதன் நன்மைகள் பற்றி விளக்கினார்.
'அட்மா' தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, உதவி மேலாளர் ரேணுகா, சிறு
தானிய நுண்ணுாட்ட பயன், அதை வயலில் இடும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
தோட்டக்கலை உதவி அலுவலர் சுகுமார், காய்கறி விதை தொகுப்பு, மரக்கன்று வினியோகம் பற்றி விளக்கினார். 40 மகளிர் பயன்பெற்றனர்.