ADDED : டிச 27, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்தியாப்பட்டணம்: தமிழக குடிநீர் வடிகால் வாரியம், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில், ஊராட்சிகளில் உள்ள, கிராம குடிநீர், சுகாதார குழு பெண்களுக்கு, களநீர் பரிசோதனை பயிற்சி, நீரின் தரத்தை ஆய்வு செய்வது குறித்த பயிற்சி, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், 16 வகை பரிசோதனைகள் குறித்து, உதவி இயக்குனர் சங்கமித்திரை(ஊராட்சி) விளக்கினார்.
வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கல்யாணி, பயிற்சிக்கான அவசியம் குறித்து பேசினார். முன்னதாக உதவி நிர்வாக பொறியாளர் ரம்யா, உபகரணங்கள் வழங்கி, பயிற்சியை தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் மகாலட்சுமி, பயிற்சி பொறுப்பாளர் ரவீந்திரன் செய்திருந்தனர்.