/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.15,000 வசூலித்தும் 'டிரான்ஸ்பார்மர்' பொருத்தவில்லை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பாதிப்பு
/
ரூ.15,000 வசூலித்தும் 'டிரான்ஸ்பார்மர்' பொருத்தவில்லை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பாதிப்பு
ரூ.15,000 வசூலித்தும் 'டிரான்ஸ்பார்மர்' பொருத்தவில்லை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பாதிப்பு
ரூ.15,000 வசூலித்தும் 'டிரான்ஸ்பார்மர்' பொருத்தவில்லை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பாதிப்பு
ADDED : அக் 26, 2024 08:04 AM
சேலம்: விவசாயிகளிடம், 15,000 ரூபாய் வசூலித்தும் இன்னும் டிரான்ஸ்-பார்மர் பொருத்தாததால், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடி-யாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, குறைதீர் கூட்டம் புகார் தெரிவிக்கப்பட்டது.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் விவசாயிகள் பேசியதாவது:
வெங்கடேசன்: குறிச்சி துணைமின் நிலையம் நிறுவ, 2019ல் சிங்-கிபுரத்தில் இருந்து அமைக்கப்பட்ட மின்பாதையால் எஸ்.வாழப்-பாடி, துக்கியாம்பாளையத்தில் என்னுடைய, 1.2 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டது. அதற்கு இழப்பீடாக
சொற்ப தொகை வழங்கிய-தோடு, மரங்களுக்கு பதில் மரக்கன்றுக்கான தொகையை வழங்கி உடையாப்பட்டி மின் அதிகாரிகள் பழி
வாங்கிவிட்டனர். இதுதொடர்பாக, 72 முறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. முதல்வர் தனி பிரிவுக்கு புகார் மனு அனுப்பினாலும் உரிய இழப்பீடு கிடைக்காது என, செயற்-பொறியாளர் அலட்சியமாக பதிலளிக்கிறார்.
என்னை போல் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெங்கடாசலம்: இயற்கை வேளாண்மைக்கு ஆலோசனை கமிட்டி அமைக்க அரசு உத்தரவிட்டு ஓராண்டாகியும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. மேற்குராஜாபாளையம் குட்டக்-கரை ஏரியில் வண்டல் மண் அள்ள, அரசு
அறிவித்துள்ள, 500 ஏரிகள் துர்வாரும் திட்டத்தில் இணைத்து உடனே துார்வார வேண்டும்.
பெரியசாமி: சிங்கிபுரத்தில் நீர்குட்டை ஆக்கிரமிப்பை அகற்ற, நில நிர்வாக கமிஷனர் உத்தரவிட்டு, 2 மாதங்கள் ஆகியும் தாசில்தார் நடவடிக்கை எடுக்கவில்லை. சிங்கிபுரம் வருவாய் கிரா-மத்துக்கு, 'அ' பதிவேடு இல்லாததால்
உரிமைச்சான்று பெற, தாசில்தார், சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு மாதக்கணக்கில் அலைய வேண்டி உள்ளது. அதற்கு, 25,000 முதல், ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே உரிமைச்சான்று உடனே கைக்கு
கிடைக்கிறது.
கணேசன்: வெள்ளையூரில் எஸ்.எஸ்.5 டிரான்ஸ்பார்மரில், 10 நாட்-களுக்கு முன் காயில் கருகியதால் அதை மின் ஊழியர்கள் கழற்றி எடுத்துச்சென்றனர். அதற்காக விவசாயிகள் வசம், 15,000 ரூபாய் வசூலித்து சென்றும், இன்னும்
டிரான்ஸ்பார்மர் பொருத்தாததால், 30க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதனால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால், 30
ஏக்-கரில் மக்காசோளப்பயிர் நாசமாகிவிட்டதால் உரிய இழப்பீடு தேவை.
நல்லதம்பி: மேட்டுடையார்
பாளையம், கொட்டவாடி ஊராட்சிகள் எல்லையில் உள்ள குளப்பன் குட்டை ஓடையின் நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்-யப்பட்டுள்ளதால் நீர்வரத்து தடைபட்டு, 25 ஏக்கர் பாசன வசதி பாதிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பை அகற்ற
வேண்டும். வனத்து-றையையொட்டி உள்ள விவசாயிகளுக்கு, தேனீ வளர்ப்பு பயிற்சி அளித்து அதற்கான பெட்டி வழங்க வேண்டும்.
ஆறுமுகம்: சூரமங்கலம் உழவர்சந்தையில், 70 சதவீதம் வியாபா-ரிகள் புகுந்துவிட்டனர். தினமும் சந்தைக்கு வரும், 1,000 பெட்டி தக்காளியில் விவசாயிகள் கொண்டு வருவது, 100 மட்டுமே. மீதி, 900 பெட்டி, வெளி மாவட்டத்தில்
இருந்து கொண்டு வந்து விவ-சாயிகள் போர்வையில் அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர். அதிகாரிகள் உடந்தையோடு இந்த முறைகேடு நடக்கிறது. எல்லா உழவர்சந்தைகளிலும் உழவர் உற்பத்தியாளர்
நிறுவனத்தில் உறுப்பினராக இல்லாதவருக்கு கடை ஒதுக்கி அதிலும் மோசடி நடக்கிறது. இவ்வாறு விவசாயிகள் பேசினர்.