/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.7 லட்சம் செலுத்தியதால் மின்மாற்றி இடமாற்றம்
/
ரூ.7 லட்சம் செலுத்தியதால் மின்மாற்றி இடமாற்றம்
ADDED : டிச 15, 2024 01:00 AM
வீரபாண்டி, டிச. 15-
ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் எதிரே, டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான, சேதமடைந்த வணிக வளாகம் இடிக்கப்பட்டது.
தொடர்ந்து அதே இடத்தில், 2.33 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக வணிக வளாகம் கட்டப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. ஆனால் அதன் தரைப்பகுதியில், இரு கடை களுக்கு முன் மின்மாற்றி இடையூறாக இருந்தது.
டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், மின்மாற்றியை இடமாற்ற, வாரியத்துக்கு விண்ணப்பித்தது. அதற்கு, 7 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த, வாரியம் தெரிவித்தது.
ஆனால் நெடுஞ்சாலைத்துறை இடத்தில் உள்ள மின்மாற்றியை இடமாற்ற, டவுன் பஞ்சாயத்திடம் கட்டணம் கேட்கிறார்கள் என கூறி, ஓராண்டாக இழுபறி இருந்ததால், வணிக வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ஆட்டையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், மின் வாரியத்துக்கு, 7 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தியது.
இதனால் நேற்று ஆட்டையாம்பட்டி மின் வாரியத்தினர், அந்த மின்மாற்றியை அகற்றி, காகாபாளையம் சாலை எதிரே அமைத்தனர்.