ADDED : செப் 04, 2026 05:02 AM
சேலம்; சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபையில், 2026 - 27-ம் நிதியாண்டுக்கு, துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அதில் த.வெ.க.,வின் சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ. லட்சுமணன் பேசிய-தாவது:
என் தொகுதியில் சில பகுதிகளில் மின்மாற்-றிகள், மக்கள் கையில் தொடும்படி தாழ்வாகவும், போதிய பாதுகாப்பின்றியும் அமைந்துள்ளன. இதனால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இது-போன்ற மின்மாற்றிகளை பாதுகாப்பான முறையில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதற்கு பதில் அளித்த, மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், ''இதுதொடர்பாக அனைத்து மின்சாரத்துறை அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்னைகள் உள்ள பகுதிகளில் உடனே ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்-ளப்படும். எம்.எல்.ஏ., லட்சுமணன் குறிப்பிட்டதை போன்று, தமிழகம் முழுதும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மின்மாற்றிகள் கண்டறியப்-பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
