/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருநங்கை அடித்து கொலை தி.கோடு வாலிபர் வெறிச்செயல்
/
திருநங்கை அடித்து கொலை தி.கோடு வாலிபர் வெறிச்செயல்
திருநங்கை அடித்து கொலை தி.கோடு வாலிபர் வெறிச்செயல்
திருநங்கை அடித்து கொலை தி.கோடு வாலிபர் வெறிச்செயல்
ADDED : ஆக 29, 2025 05:43 AM
அம்மாபேட்டை: திரு நங்கையை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் தேடுகின்றனர்.
சேலம், பொன்னம்மாபேட்டை வடக்கு ரயில்வே லைனை சேர்ந்தவர் மனோகரன்; தங்க ஆசாரி; இவரது மனைவி ராணி; தம்பதிக்கு, மூன்று மகள்கள், இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் மகன் சரவணன், 21. மே மாதம் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, திருநங்கையாக மாறி, வனிதா என பெயரை மாற்றிக் கொண்டார்.
அதே பகுதியில், தனியாக வசித்த வனிதாவை பார்க்க, அவரது வீட்டுக்கு, சகோதரி மரகதம், நேற்று காலை, 11:00 மணிக்கு வந்தபோது, வனிதா கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அம்மாபேட்டை போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
போலீசார் கூறுகையில், 'வீட்டில், 1.5 அடி நீள இரும்பு ராடு கைப்பற்றப்பட்டது. அந்த ராடால் வனிதா, பின்மண்டை, நெற்றியில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், வனிதா, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த நவீன் என்பவரை, மூன்று மாதங்களுக்கு முன், திருமணம் செய்து குடும்பம் நடத்தியது தெரியவந்தது. தலைமறைவான நவீனை தேடி வருகிறோம். அவர் பிடிபட்டால், கொலைக்கான காரணம் தெரிய வரும்' என்றனர்.

