/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரியின் பட்டை உடைந்து சாலையில் விழுந்த அரிசி மூட்டைகளால் போக்குவரத்து பாதிப்பு

ADDED : ஜூலை 18, 2025 01:21 AM
ஆத்துார், ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியின் அடிப்பாக பட்டை உடைந்து, 50க்கும் மேற்பட்ட மூட்டைகள் சாலையில் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சேலத்தில், சரக்கு ரயிலில் வந்த ரேஷன் அரிசி மூட்டைகளை, லாரிகளில் ஆத்துார் நுகர்பொருள் கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டது. நேற்று காலை, 9:00 மணியளவில் ஆத்துார், கேசவன் தியேட்டர் பஸ் ஸ்டாப் வழியாக ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லாரி வந்தபோது, வேகத்தடையில் ஏறி, இறங்கியது. அப்போது, லாரியின் அடிப்பகுதி பட்டைகள் உடைந்ததால், 50க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் சாலையில்
விழுந்தன.
சாலை நடுவில் மூட்டைகள் விழுந்ததால், அவ்வழியாக போக்குவரத்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு தகவல் அளித்தனர். சாலையில் கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகளை, மற்றொரு லாரியில் ஏற்றிவிட்டனர்.
இதனால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு
ஏற்பட்டது.