/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி
/
நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி
ADDED : நவ 25, 2025 01:41 AM
சேலம், பசுமை சாலை திட்டத்தின் கீழ், ஆத்துார் உட்கோட்ட பகுதி நெடுஞ்சாலைகளில், மரக்கன்றுகள் நடும் பணி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் பசுமை சாலைகள் திட்டத்தின் கீழ், நெடுஞ்சாலை ஓரங்களில், 10 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு, நெடுஞ்சாலைத் துறை சார்பில் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஆத்துார் உட்கோட்டம் மேற்கு பிரிவில் 2,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன.
முசிறி - துறையூர் ஆத்துார் சாலை மற்றும் மஞ்சினி - கெங்கவல்லி சாலையில், 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தற்போது மழை பெய்து வருவதால், தெடாவூர் - தம்மம்பட்டி பிரதான சாலையோர நிலத்தில் அரசன், புங்கன், புளியன், பாதாம், ஆலமரம், பூவரசு உள்பட, 10 அடி உயரமுள்ள, 250 மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. மரக்கன்றுகளுக்கு பச்சைவலை பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் முத்துக்குமரன், மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்சியில் ஆத்துார் நெடுஞ்சாலை உட்கோட்ட உதவி கோட்ட பொறியாளர் அன்புச்செழியன், இளநிலை பொறியாளர் சத்தயமூர்த்தி, உதவிப்பொறியாளர் ஓம்பிரகாஷ் மற்றும் நெடுஞ்சாலை பணியாளர்கள் உடனிருந்தனர்.

