/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வடக்குநாடு ஊராட்சியில் பழங்குடியின நல இயக்குனர் ஆய்வு
/
வடக்குநாடு ஊராட்சியில் பழங்குடியின நல இயக்குனர் ஆய்வு
வடக்குநாடு ஊராட்சியில் பழங்குடியின நல இயக்குனர் ஆய்வு
வடக்குநாடு ஊராட்சியில் பழங்குடியின நல இயக்குனர் ஆய்வு
ADDED : டிச 20, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த, சின்னகல்வராயன்மலை வடக்கு நாடு ஊராட்சி கிலாக்காடு முதல், தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்லிங் நாய்க்குத்தி வரை இணைப்புச்சாலை அமைப்பது தொடர்பாக, நேற்று தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குனர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
விரைவில், அப்பகுதியில் இரு மாவட்டத்திற்கும் இணைப்பு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் தெரிவித்தார். சின்னகல்வராயன் மலை வடக்கு நாடு ஊராட்சி மன்ற தலைவரும், பழங்குடியின நலவாரிய உறுப்பினருமான வெங்கடேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.