/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீர்ப்பாய நீதிபதி பணியிடம் காலி; நுாற்பாலை தொழிலாளர்கள் பரிதவிப்பு
/
தீர்ப்பாய நீதிபதி பணியிடம் காலி; நுாற்பாலை தொழிலாளர்கள் பரிதவிப்பு
தீர்ப்பாய நீதிபதி பணியிடம் காலி; நுாற்பாலை தொழிலாளர்கள் பரிதவிப்பு
தீர்ப்பாய நீதிபதி பணியிடம் காலி; நுாற்பாலை தொழிலாளர்கள் பரிதவிப்பு
ADDED : ஜன 28, 2025 07:15 AM
சேலம்: சேலம் கூட்டுறவு நுாற்பாலை, 20 ஆண்டுகளாக மூடி கிடப்பதை, தேர்தல் வாக்குறுதிப்படி திறக்கவும், உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவும், அதன் தொழிலாளர்கள் சார்பில், நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., சேலம் டிஸ்ட்ரிக்ட் பஞ்சாலை தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலர் மோகன்ராஜ் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி சேலம் வந்தபோது, தேர்தல் வாக்குறுதிப்படி, சேலம் கூட்டுறவு நுாற்பாலையை திறக்க கோரிக்கை மனு அளித்தோம். உயர்நீதிமன்ற தொழில் தீர்ப்பாயம், சேலம் கூட்டுறவு நுாற்பாலை வழக்கை, மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க, கவர்னர் ரவி உத்தரவிட்டார். ஆனால், தீர்ப்பாய நீதிபதி இல்லாத காரணத்தால் வழக்கு தேக்கமாகிவிட்டது. எனவே தலைமை நீதிபதி, உடனடியாக தீர்ப்பாய நீதிபதி பணியிடத்தை நிரப்பி, நிலுவை வழக்கை துரிப்படுத்த வேண்டும்.
உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, உரிய இழப்பீடு தொகையை தொழிலாளர்களுக்கு போர்க்கால அடிப்படையில் வழங்க, அரசு நடவடிக்கை தேவை. ஆலையின் துணை விதிகளை, நிர்வாகம் தவறாக பயன்படுத்தியதன் காரணமாக, தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வேலையும், சட்ட பாதுகாப்பும் வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
சேலம் மாவட்ட சாய, ஜவுளி முறைசாரா தொழிலாளர் சங்க துணைத்தலைவர் பச்சமுத்து பேசினார். சி.ஐ.டி.யு., பொருளாளர் இளங்கோ உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

