/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காஷ்மீர் தாக்குதலில்உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
/
காஷ்மீர் தாக்குதலில்உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
ADDED : ஏப் 26, 2025 01:51 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்., சார்பில், காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
ஓசூர் காந்தி சிலை அருகில் இருந்து, ராம்நகர் அண்ணாதுரை சிலை வரை, கிருஷ்ணகிரி காங்., எம்.பி., கோபிநாத் தலைமையில், கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் சென்றனர். மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நீலகண்டன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் சாதிக்கான், நிர்வாகிகள் மைஜா அக்பர், சூர்யகணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல், தேன்கனிக்கோட்டையில் பா.ஜ., சார்பில், காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், டவுன் பஞ்., தலைவர் சஞ்சனா பாலாஜி, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் ரங்கநாத், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் புட்டராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
* ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு, தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பஸ் ஸ்டாண்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பா.ஜ., மொரப்பூர் கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், நகர காங்., சார்பில், 26 சுற்றுலா பயணிகளின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். நகர தலைவர் ரகமத்துல்லா வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ஜேசு துரைராஜ், நாராயணமூர்த்தி, ராஜாகுமரவேல், சுப்பிரமணி, மாவட்ட துணைத் தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட, 26 சுற்றுலாப் பயணிகளின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, மெழுகுவர்த்தி ஏந்தி காந்திசாலை வழியாக ஊர்வலமாக சென்று பழையபேட்டை காந்திசிலை முன் மவுன அஞ்சலி செலுத்தினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகு, சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட நிர்வாகிகள் சக்கரவர்த்தி,
சரவணன், லோகநாதன் உள்பட பலர்
பங்கேற்றனர்.