/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீரபாண்டியில் த.வெ.க., சார்பில் மருத்துவ முகாம்
/
வீரபாண்டியில் த.வெ.க., சார்பில் மருத்துவ முகாம்
ADDED : ஜூன் 17, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி, வீரபாண்டி கிழக்கு ஒன்றியம், த.வெ.க., சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் வீரபாண்டியில் நடந்தது. தெற்கு மாவட்ட செயலர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். முகாமில் சர்க்கரை பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. 100க்கும் மேற்பட்டவர்கள் முகாமில் பரிசோதனை செய்து கொண்டனர்.