/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.ஐ.ஆர்., குளறுபடியை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்
/
எஸ்.ஐ.ஆர்., குளறுபடியை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்
எஸ்.ஐ.ஆர்., குளறுபடியை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்
எஸ்.ஐ.ஆர்., குளறுபடியை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 17, 2025 04:44 AM
சேலம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்.ஐ.ஆர்.,) குள-றுபடியை கண்டித்து, த.வெ.க., சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட செயலர் பார்த்திபன் தலைமை வகித்து பேசியதாவது:
எஸ்.ஐ.ஆர்., குறித்து தலைவர் விஜய் வெளியிட்டுள்ள ஆடி-யோவை போல, மத்திய, மாநிலத்தில் ஆண்ட, ஆளுங்கட்சிகள் கூட, அதைப்பற்றி தெளிவாக சொல்லவில்லை. கலெக்டர் அலுவ-லகங்களில் பெறப்படும் குறைதீர் மனுக்கள், தீர்க்கப்படாமல், நிறைய குறைகள் அப்படியே உள்ளன. அதேபோல், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்படும் மனுக்கள் மீதும் நடவ-டிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கூட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும் அதிகாரிகள், சேலத்தில் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை கவனிப்-பார்களா? மக்களும், வாகனங்களும், சாலைகளில் நிம்மதியாக போக முடியவில்லை.
அதை, உள்ளாட்சித்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் வந்து ஆய்வு செய்தால் தெரியும். த.வெ.க., ஆட்சிக்கு வந்தால், உள்-ளாட்சி இடங்களில் கடைபோடும் வியாபாரிகளிடம் சுங்க கட்-டணம் வசூலிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 'எஸ்.ஆர்.ஐ.,யை எளிமைப்படுத்து; எங்கள் ஓட்டு; எங்கள் உரிமை; எங்கள் ஓட்டை உறுதிப்படுத்து' என கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலர்கள் வெங்கடேசன், செல்வம், மணி-கண்டன், செந்தில், மகளிரணியினர், வக்கீல் பிரிவினர் உள்பட பலர் பங்கேற்றனர்.

