ADDED : செப் 25, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்; மேட்டூர் போலீசார், அங்குள்ள 4 ரோடு, தொப்பூர் - பவானி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு வாகன சோதனையில் ஈடு-பட்டனர். அப்போது வேலுார் மாவட்டம் குடியாத்-தத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று கொண்-டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில், 31 காளை மாடுகளை நெருக்கமாக நிறுத்தி வைத்து செல்வது தெரிந்தது.
பொள்ளாச்சியை சேர்ந்த லாரி டிரைவர் அப்பு-சாமி, 51 என்பவரிடம் விசாரித்ததில், காளை மாடு-களை, பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு கொண்டு செல்வது தெரிந்தது. மேலும் மாடுகளுக்கு மருத்-துவ சான்றிதழ், பொருத்தமான அறைகள், இடை-வெளி இன்றியும், தேவையான தண்ணீர், வைக்கோல் கொடுக்காமல் கொண்டு சென்றதும் தெரிந்தது. இதனால் 31 காளை மாடுகளுடன் லாரியை பறிமுதல் செய்து, அப்புசாமி மீது வழக்-குப்பதிந்தனர்.
