/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காசநோய் ஒழிப்பு முகாம் இலவச பரிசோதனை செய்யலாம்
/
காசநோய் ஒழிப்பு முகாம் இலவச பரிசோதனை செய்யலாம்
ADDED : டிச 08, 2024 12:56 AM
காசநோய் ஒழிப்பு முகாம்
இலவச பரிசோதனை செய்யலாம்
சேலம், டிச. 8-
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், 'காசநோய் இல்லாத தமிழ்நாடு' எனும் விழிப்புணர்வு வாகனத்தை, கலெக்டர் பிருந்தாதேவி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். கையெழுத்திட்டு, கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் உறுதிமொழி வாசிக்க, அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங், டி.ஆர்.ஓ., மேனகா, சுகாதாரப்பணி இணை இயக்குனர் நந்தினி உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து காசநோய் துணை இயக்குனர் கணபதி கூறியதாவது:
நாடு முழுதும் காசநோய் தாக்கம் அதிகமுள்ள, 347 மாவட்டங்கள், அதில் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட, 22 மாவட்டங்களில், '100 நாள் தீவிர காசநோய் ஒழிப்பு முகாம்' தொடங்கப்பட்டுள்ளது. இதில் காசநோய் தொற்றும் வாய்ப்பு அதிகமுள்ள நீரிழிவு நோயாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டோர், ஊட்டச்சத்து குறைபாடு, மது, புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு, இலவச பரிசோதனை செய்யப்படும். அதற்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனம், மாவட்டம் முழுதும் பயணிக்கிறது. காசநோய் கண்டறியப்பட்டால், 6 மாத சிகிச்சையுடன் சத்தான உணவு உட்கொள்ளும்படி, நோயாளி வங்கி கணக்கில் மாதம், 1,000 வீதம், இரு தவணையாக, 6,000 ரூபாய் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.