/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் விமான நிலையத்தில் காசநோய் பரிசோதனை முகாம்
/
சேலம் விமான நிலையத்தில் காசநோய் பரிசோதனை முகாம்
ADDED : ஜன 21, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: விமான நிலையத்தில், மாவட்ட காசநோய் மையம் சார்பில், இலவச பரிசோதனை முகாம் நடந்தது.
சேலம் விமான நிலையத்தில் தினந்தோறும், 500க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று விமான நிலைய இயக்-குனர் வைதேகிநாதன் தலைமையில், காசநோய் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அதில், சேலம் மாவட்ட காசநோய் தடுப்பு மைய துணை இயக்குனர் கணபதி உள்ளிட்ட டாக்டர்கள் பங்கேற்று பயணிகள், விமான நிலைய அலுவலர்கள், பணியாளர்கள், போலீசார், தீய-ணைப்புத்துறையினர், டாக்ஸி ஓட்டுனர்கள் ஆகியோருக்கு இல-வச காசநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்-தினர்.

