/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துாத்துக்குடி ரவுடி கொலை வழக்கு; 4 பேரை காவலில் எடுத்து விசாரணைக்கு போலீஸ் மனு

ADDED : ஜூலை 29, 2025 01:08 AM
சேலம்,துாத்துக்குடி ரவுடி கொலை வழக்கில், நான்கு பேரை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.துாத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி மதன் குமாரை கடந்த, 15ல் சேலத்தில் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக துாத்துக்குடியை சேர்ந்த ஹரிபிரசாத் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள், 13 பேரை அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதில் ஹரிபிரசாத் உள்ளிட்ட 4 பேரை, காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக அனுமதி வழங்க வேண்டி, நேற்று சேலம் ஜே.எம். எண் 3 நீதிமன்றத்தில் அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் காந்திமதி மனுதாக்கல் செய்தார். கொலைக்கு பயன்படுத்திய மூன்று பைக், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கொலை நடந்த ஓட்டல் கடந்த, 15 முதல் பூட்டிய நிலையில் இருந்தது. இந்நிலையில், ஓட்டலை திறக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, கடையை திறந்து உறைந்து கிடந்த ரத்தங்களை சுத்தப்படுத்தி, ஓட்டலுக்கு வண்ணம் அடிக்கப்பட்டு, டைல்ஸ் மாற்றப்பட்டு திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.