/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டின் பூட்டை உடைத்து 'டிவி', சிலிண்டர் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 'டிவி', சிலிண்டர் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 'டிவி', சிலிண்டர் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 'டிவி', சிலிண்டர் திருட்டு
ADDED : ஜூலை 15, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், செவ்வாய்பேட்டை நெய்மண்டி அருணாசலம் தெருவை சேர்ந்தவர் சாந்தி, 52. இவர் கடந்த, 11ல் திருப்பதி சென்றார். நேற்று முன்தினம் மதியம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, எல்.இ.டி. 'டிவி'. சிலிண்டர், இரண்டு குத்துவிளக்கு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து சாந்தி அளித்த புகார்படி, செவ்வாய்பேட்டை போலீசார் அந்த பகுதியில் உள்ள 'சிசிடிவி'யில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.